கத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி

தோகா: கத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலியாக பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்துள்ளார். இதனை அந்நாட்டின் சுகாதாராத்துறை தெரிவித்துள்ளது. கத்தார் நாட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்தோர் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.


கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 5 வரை நீட்டிப்பதாக நேற்று(மார்ச்-28) அறிவி்த்தது. மார்ச்-16ந் தேதியில் இருந்து, இரவு 8 மணிமுதல் காலை 6 மணி வரை, கிருமிநாசினியால் நாடு முழுவதும் சுத்தம் செய்து வருகிறது. கத்தார் நாட்டில் கொரோனாவுக்கு பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளி கொரோனாவால் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

எமிரேட் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது: "இக்கால கட்டத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், வெளிநாட்டில் இருந்து வந்தோர் அனைவரும் வீட்டிலேயே இருப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்." என கூறியுள்ளார்.


கத்தாரில் 590 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 45 பேர் குணமடைந்துள்ளனர். அதில் பெரும்பாலனவர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த பணியாளர்கள். கத்தார் ஒலிம்பிக் கமிட்டி, ஏப்ரல் 14 வரை அனைத்து விளையாட்டுகளை தடை செய்துள்ளதாக கூறியுள்ளது. அபுதாபி இளவரசர் முகம்மது பின் ஜயத் அல் நாஹ்யன், கொரோனா வைரஸ் சோதனை மையத்திற்கு சென்று சோனைக்கான மாதிரியை அளித்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.